எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டாரா பேட்டன்கட்டுரைகள்

தலைவனை பின்பற்று

வார்த்தைகளே இல்லை. வெறும் இசையும், அசைவும் தான். கோவிட் -19 பெருந்தொற்றின் மத்தியிலே 24 மணி நேர  ஜும்பா தொடர் பயிற்சியில் உலகமெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்தனர். அவர்கள் இந்தியா, சீனா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் பகுதிகள், மற்றும் பல இடங்களில் இருந்து அவர்களை, நடத்தின பயிற்சியாளர்களை ஊடக வாயிலில் பின்பற்றினார்கள். இந்த வேறுபட்ட தனிநபர்கள் மொழிகளின் தடைகள் இல்லாமல் ஒன்றாக இசைந்து அசைய முடிந்தது ஏன்? காரணம், 1990களின் மத்தியில் கொலம்பியாவின் உடற்பயிற்சியாளரால் உருவாக்கப்பட்ட இந்த ஜும்பா என்கிற உடற்பயிற்சி  முறையின் பயிற்சியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வாய்மொழி குறிப்புகளை பயன்படுத்துவது கிடையாது. வகுப்பில் பயிற்சியாளர்கள் அசைய, மாணவர்கள் அவர்கள் அசைவை பின்பற்றுவார்கள். ஒரு வார்த்தையும் இன்றி, கூச்சலும் இன்றி அவர்கள் அதைப் பின்பற்றுவார்கள்.

வார்த்தைகள் சிலசமயம் நம்மை இடையமறித்து தடை உண்டு பண்ணக்கூடும். கொரிந்தியர்கள் அனுபவித்தாற்போல சில குழப்பங்களையும் ஏற்படுத்த கூடும், அவர்களுக்கான முதல் நிருபத்தில் பவுல் இதை குறிப்பிடுகிறார். குறி[பிட்ட உணவுகளை உட்கொள்வதை குறித்து உண்டான தர்க்கங்களை விவாதிக்கையில் எழும்பின குழப்பமே அது (1 கொரிந்தியர் 10:27-30). ஆனால் நமது செயல்கள், தடைகளையும், குழப்பங்களையும் கூட கடந்து நிற்கும். இன்றைய வேத வாசிப்பு பகுதியில் பவுல் குறிப்பிடுவது போல, இயேசுவை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று ஜனங்களுக்கு நாம் நமது செயல்கள் மூலம் காண்பிக்க வேண்டும், “அநேகருடைய நன்மையை” விரும்பி தேட வேண்டும் (10:32-33) நாம் இயேசுவின் மாதிரியை பின்பற்றுகையில் (11 :1), அவரை விசுவாசிக்கும்படி நாம் உலகத்தாரை அழைக்கிறோம்.

யாரோ ஒருவர் சொன்னது போல,"சுவிசேஷத்தை எப்போதும் பிரசங்கியுங்கள், தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை உபயோகியுங்கள்". நாம் இயேசுவின் தலைமையை பின்பற்றும்போது, அவர் நமது செயல்களையே நமது விசுவாசத்தின் உண்மையான அடையாளங்களாக வழிநடத்தி மற்றவர்களுக்கு தருவாராக. மேலும் நமது வார்த்தைகளும், செயல்களும் "தேவனுடைய மகிமைக்கென்றே" (10:31) இருப்பதாக.

குயவனின் சக்கரம்

1952ல் மக்களின் கவனமின்மையால் கடையில் இருக்கும் பொருட்களை உடையாமல் தவிர்க்க கடைகாரர் ஒரு அடையாளத்தை வெளியிட்டார்: “நீங்கள் உடைத்த பொருள் உங்களுடையது.” பொருளை வாங்குபவர்களுக்கு அது எச்சரிக்கையின் வார்த்தைகளாக தென்பட்டது. இதுபோன்ற வித்தியாசமான அடையாள வாக்கியங்களை இதுபோன்ற கடைகளில் அநேகம் காணலாம். 

ஆனால் பரம குயவனுடைய கடையில் முரண்பாடான ஒரு வாக்கியத்தை நாம் பார்க்கமுடியும். எரேமியா 18ல் பதிவாகியுள்ள, “நீங்கள் உடைத்தால், நாங்கள் அதைவிட சிறந்ததாய் உருவாக்குவோம்” என்னும் வாக்கியமே அது. எரேமியா ஒரு குயவனின் வீட்டிற்குச் சென்று, குயவன் எவ்வாறு “கெட்டுப்போன” மண்பாண்டத்தை கையில் எடுத்து அதை நேர்த்தியாய் “வேறே பாண்டமாக வனைந்தான்” (வச. 4) என்பதை பார்க்கிறார். தேவன் மிகத்திறமையான குயவன் என்பதையும் நாம் களிமண் என்பதையும் தீர்க்கதரிசி நமக்கு நினைவூட்டுகிறார். தேவன் சர்வவல்லவர் என்பதினால், அவர் உருவாக்கிய பாத்திரத்தைக் கொண்டு தீமையை அழிக்கவும், நம்மில் அழகை உருவாக்கவும் அவரால் முடியும். 

நாம் கெட்டுப்போயிருந்தாலோ அல்லது உடைக்கப்பட்டாலோ தேவனால் நம்மை மீண்டும் உருவாக்க முடியும். அவர் திறன்வாய்ந்த குயவன்; நம்முடைய உடைக்கப்பட்ட வாழ்க்கைத் துண்டுகளைக்கொண்டு புதிய விலையேறப்பெற்ற பாத்திரத்தை அவரால் உருவாக்க முடியும்.  தேவன் நம்முடைய உடைந்த வாழ்க்கைகளையோ தவறுகளையோ, கடந்தகால பாவங்களையோ பயன்படாத விஷயங்களாய் பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக, நமது உடைந்த துண்டுகளை எடுத்து, அவருடைய பார்வைக்கு நலமாய் பட்டபடி மறுவுருவம் கொடுக்கிறார். 

நாம் உடைக்கப்பட்டபோதிலும் அவர் நம்மை பொருட்படுத்துகிறார். உடைந்த துண்டுகளும் அவரின் கைகளில் உபயோகப்படும் அழகான பாத்திரங்களாய் வனையப்படுகிறது (வச. 4). 

வெண்மையாக்கும் மன்னிப்பு

அந்த சிறிய சிவப்பு மாயாஜால செவ்வகப் பெட்டி அற்புதமான ஒன்று. என் சிறுவயதில் அதை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் விளையாடுவேன். ஒரு குமிழைத் திருகினால், அதின் திரையில் நேர்க்கோடு தோன்றும். அடுத்த குமிழைத்திருகினால் செங்குத்தான கோட்டை வரைய முடியும். இரு குமிழ்களையும் சேர்த்துத் திருகினால் வரிகள், வட்டங்கள், அழகான மற்ற வடிவங்களை உருவாக்கமுடியும். ஆனால் அந்த மாயாஜால சிவப்புப் பெட்டியை தலைகீழாய் திருப்பி, மேலும் கீழுமாய் அசைக்கும்போதே நிஜமான மாயாஜாலம் தோன்றியது. ஒரு வெற்றுத்திரை தோன்றி, ஒரு புதிய படைப்பை உருவாக்க எனக்கு சந்தர்ப்பம் அளித்தது.

தேவனின் மன்னிப்பு இந்த பெட்டி போன்றது தான். தேவன் நம் பாவங்களை நீக்கி வெண்மையாக மாற்றுகிறார். நாம் செய்த தவறுகளை நாம் நினைவுகூர்ந்தாலும், தேவன் அவற்றை நினைவுகூர்வதில்லை. அவர் நம் பாவங்களை முற்றிலுமாய் கழுவி, அப்புறப்படுத்துகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமல் (சங்கீதம் 103:10), கிருபையாக நம்மை மன்னிக்கிறார். நாம் முற்றிலும் தூய்மையாக்கப்பட்ட ஒரு வெற்றுப்பலகை. அவரிடம் மன்னிப்பைத் தேடும்போது, நமக்காய் ஒரு புது வாழ்வு காத்திருக்கிறது. 

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (வச. 12) என்று சங்கீதக்காரன் நமக்கு நினைவுபடுத்துகிறார். தேவனுடைய கண்களில் நம் பாவங்கள் கருஞ்சிவப்பான எழுத்தாகவோ அல்லது ஒரு மோசமான ஓவியமாகவோ தென்படுவதில்லை. அவற்றை நமக்கு எட்டாத தூரத்திற்கு அனுப்பிவிடுகிறார். அதுதான் நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம். அவருடைய அற்புதமான கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.